சனி, ஜூன் 11, 2016

பயங்கர கவிதைகள் 2





























கதலிக்கிறேன் கதலிக்கிறேன்
கதக்களியு ஆடுறேன்னு
எம் பொறத்தாண்டியே ஊரு பூராம்
சுத்தி சாவடிச்சுட்டு போனவொ
புதுப்புருஷங்கிட்ட மொதொ
ராத்திரில கேக்கா,
ஏனுங் இதுக்கு முன்ன நீங்கொ
யாரையாச்சி கதலிச்சி சாவடிச்சிருக்கீங்களா?’

000
செருப்பு அந்து போச்சுனு
அவத்திக்கே உட்டுட்டு பஸ்
ஏறுறேன்.. அதை தூக்கி கிக்கத்துல
வெச்சுட்டு போவுது லூசு!
இதுல ரவ் லுக்கு வேற அதுக்கு!
மண்டையக் கொண்டி எங்க முட்டிக்க?

000
ரமேசு உன்னிய கூப்பிட்டேன்
சுவிச் ஆப்புங்காட்டி தான்
சுரேஷை கூப்பிட்டுக்கிட்டேன்!

000
என்னை பொண்ணு பாக்க
இன்னிக்கி வர்றாங்கடாங்கேன்..
மேல சொல்லுங்கிறியா?
-உங்களிடம் கதைத்துக் கொண்டிருந்த
நபர் காதில் புகை வந்ததால்..
தன் அலைபேசியை உடைத்து விட்டார்!

000 யாராச்சிம் எதுனாச்சிம்
சொல்லுவாங்களோன்னு
சாமத்துல காட்டுப்பக்கமா
அவுங்க அலைபேசி விளக்கோட
லப்பரு செருப்பத் தொட்டுட்டு
வந்துட்டு போயிட்டு தா இருக்காங்க!
ஊருக்கே விசயம் தெரியுமின்னு
பாவம் அவிங்களுக்கு தெரியாது!
தெரிஞ்சா உசுரை உட்டுருவாங்க அவுங்க!
மாகாளியாத்தாஅப்பிடிக்கிப்பிடி
ஆயிடாம அவுங்கள பக்க
துணையிருந்து பாத்துக்கோ!

000
ரமேசு உன்னிய கட்டினா
எட்டுப் பிள்ளைகள்ன்னு ஜோசியம்
சொல்லுது! சுரேசை கட்டிக்கிறேன்!
மண்டபத்துல வந்து ரவுசு உட்டீன்னா
மண்டையில போடுவேன்!


000

Post Comment

வியாழன், ஜூன் 09, 2016

வேற்றுக் கிரகவாசி - முகப்புத் தகவல்
















.


















உங்களோடு

மீண்டும் ஒரு சிறுகதை தொகுதி முலமாக வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது சுத்தமாக இலக்கிய வகைமைக்குள் அடங்கி விடும் கதைகளாக அமைவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே! இலக்கியச் சிறுகதைகள் என்று தவளைகள் குதிக்கும் வயிறு, மண்பூதம் இந்த இரண்டு புத்தகங்களைத் தொடர்ந்து வெளிவரும் இந்தத் தொகுப்பு என் கடைசி இலக்கியச் சிறுகதை தொகுப்பாக இருக்கவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். சென்ற இரண்டு வருடங்களாகவே நான் நாவல் என்ற வகைமைக்குள் பலவற்றை செய்யும் ஆசையில் இருந்தேன். ஆனால் என் பழக்கம் எல்லாம், சாமார்த்தியம் எல்லாம் சிறுகதைக்குள் மட்டுமே!

இலக்கியச் சிறுகதைகள் என்று எழுதுவன எல்லாமே என் நாவல்களுக்குள் அடங்கிப் போய் விட்டமையால் கதைகளை குறைவாகவே எழுதினேன். ஆனால் இந்தத் தொகுப்பு திட்டமிடப்பட்ட தொகுப்பு. இதில் நான் கமர்சியலாக எழுதிய கதைகள் எதுவும் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டேன். முன்பாக பிலோமி டீச்சர் தொகுதியில் இரண்டு வகைமையான எழுத்துக்களும் சேர்ந்தே அமைந்து விட்டன! அது தவறு என்றும் நான் நினைக்கவில்லை.

முன்னங்காலை ஊன்ற முடியாத சிறுத்தை கதை உயிர்மையில் வெளிவந்த போது பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அது ஒரு கதை என்கிற அளவிலேயே பார்க்கப்பட்டது. அதில் வழக்கமான என் நையாண்டிகளும் குறைவு. அந்த சிறுகதையை எழுத என் உழைப்பு அதிகம்.

போக நெரிசல் மிகுந்த வீடு சிறுகதையும் உயிர்மையில் வெளிவந்த சிறுகதையே! அதுவும் அப்படியே! இப்படியான கதைகள் என்னிடமிருந்து வருவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்றாலும் முந்தைய என் பிம்பத்தை உடைப்பதற்காகவே நான் விருப்பப்பட்டு எழுதிய கதைகள். போக மணல்வீடு இதழில் வந்த கதைகளும் என் இருப்பை உறுதி செய்யும் கதைகளே! கதைகள் விதம் விதமாக எழுதப்படும் காலத்திலும் நேரத்திலும் நாம் இருக்கிறோம். வா.மு.கோமு எழுதும் கதைகள் பாலியலை தொட்டுச் செல்பவையே! என்ற பிம்பத்தை உடைக்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

என் எழுத்துக்களை தொடர்ந்து வெளியிட்ட இலக்கிய இதழ்களுக்கு இந்த சமயத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன். என் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய திரு. சுகன் அவர்களையும் இந்த நிமிடத்தில் நினைத்து பெருமூச்சு ஒன்றை விடுகிறேன்.

இந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் பூரான் என்கிற கதை என் அனுபவமே! இத்தனை நாட்களாகவே நான் பூரானின் கடிகளை வாங்கி அவைகளை கொன்று கொண்டேயிருக்கிறேன். நான் பூரானாக மாறிய கனவுகள் ஏராளம். இந்த சிறுகதை எதிர் வெளியீட்டில் வந்த காப்காவின் உருமாற்றம் படித்த போது விரிவாக்கப் பணிகளைத் தேடியது. காசம் காப்காவை உருமாற்றம் எழுத வைத்தது. அந்த காசத்தின் நினைவலைகள் என்னை பழைய கதையை விரிவாக்கம் செய்யத் தூண்டியது. ஒரு விசயம் எப்படி இன்னொரு விசயத்தை எளிதாக இலக்கியத்தில் தொடச் செல்கிறது? என்பதை படிக்கையில் வாசகர்கள் உணரலாம். பூரான் என் காசநோயின் தீவிரத்தையும் ஒருவகையில் தொட்டுச் செல்ல காப்காவின் உருமாற்றம் உதவியது என்பதைச் சொல்லி விடுகிறேன் முகப்பிலேயே!

இந்தத் தொகுதியின் வெற்றி என்னை அடுத்த வருடம் இதைத் தாண்டிய மற்றொரு தொகுதியை வெளியிடும் ஆர்வத்தை உருவாக்கும் பணியைச் செய்யப் போவதில்லை என்பதை இச்சமயத்தில் நினைத்துக் கொள்கிறேன். என் இலக்கிய சிறுகதை வாசிப்பாளர்களுக்கான கடைசி விருந்து இந்தத் தொகுதி. தமிழில் இவ்வளவு எளிதாக விசயத்தை சொல்ல முடியும் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

புத்தகத்தை மிகச்சிறப்பாக கொண்டுவரும் நண்பர் வேடியப்பனுக்கு என் நன்றிகள்!

                                                                                                                                                                                                                                                                                                                      அன்போடே என்றும்
                                                                                                                                                            வா.மு.கோமு
                                                              பேச : 9865442435
                                                             vaamukomu@gmail.com
                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

Post Comment

திங்கள், ஜூன் 06, 2016

கவிதைகள் சில



நா எதாச்சி பண்டீட்டன்னா..
ஏம் பண்டுனீன்னு மட்டுலு 
கடேசியா கேக்கப்புடாது!
அப்புறம் எனக்கு மசக்கோவம்
வந்துருமாமா! 
அன்னாவரிக்கு கம்முனு
இருந்துட்டு அதென்ன கடேசில
ஏம் பண்டுனீன்னு கேள்வி?

00


திடீருன்னு போனு வந்துச்சு சாமத்துல!
யாரு என்னான்னு தெரியாமயே
தூக்க கலக்கத்துல யார்ங்க மேடம்?’ன்னேன்!
நானு மாரியாத்தா பேசுறேன்னாங்க!
சாமி சாமி சொல்லுங்க சாமின்னேன்!
என்ன தூக்கமா? ஓடியாடி விளையாட
வந்திருகேண்டா!ன்னாங்க!
ஊருக்குள்ள போயி ஆடுங்க!
அப்படினுபோட்டு ஆப்பண்னிட்டேன்!

000

ரெண்டு பொடுசு பெத்த சந்திரிகா
போனப்போட்டுப் பேசினா!
ஊட்டுக்காரனோட நேத்தீல
இருந்து சண்டெ! உங்ககிட்ட
ராயல் அக்காடு இருக்கா?
இருக்குடி எடுத்தாறேன்!
அப்படின்னா முன்னாடி
லைட்டெ ஆப் பண்டிக்கிறேன்
சீக்கிரம் கொண்டாங்க!
சியர்ஸ் போடுவீல்ல?
-
நானு என்ன நெலமைல
இருக்கேன், புரிஞ்சிக்காமப்
பேசிறீங்களே!
சரிக் கொண்டாறேன்! -என்று
சுவிட்ச் ஆப் பண்ணிட்டு 
தூங்குற சுகமிருக்கே!
(தன் வினை மீண்டும் எப்போதாவது திருப்பி சுடும்)

000

பயங்கர கவிதை!
என் கவிதையை நீ எழுது!
உன் கவிதையை பத்து
மாசம் கழித்து பிரசவிக்கிறேன்!

000

பயங்கர கவிதை 2.
என்னதான் சொல்லு..
உன்னியாட்ட எதும் வராது!


000

பயங்கர கவிதை 3.
நீங்கள் டயல் செய்த பெண்
இப்போது கசமுசா என்றிருக்கிறார்!

000

பயங்கர கவிதை 4.
பாத்து பாத்து மெதுவா!
நிறுத்தி நெதானமா..
பாரு இப்பத்தான சொன்னேன்
அதுக்குள்ள மறந்துட்டியா?

000

பயங்கர கவிதை 5.
அவுரு இருக்காரு
அப்புறம் கூப்பிடு!

000

Post Comment